எல்லேவல நீர்வீழ்ச்சியை பார்வையிட இன்று 7 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று சென்றுள்ளனர்.குறித்த இடத்தில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
பல மணி நேரம் நீடித்த தேடுதல் நடவடிக்கைக்கு பின் நீரில் மூழ்கி உயிரிழந்த இரு இளைஞர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
உயிரிழந்தவர்கள் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த 21 வயது மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
21 வயதுடைய இளைஞன் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் என்பதுடன் மற்றைய இளைஞன் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.