ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான தற்போதைய மோதலில் பிரேசில் எந்தவொரு நாட்டிற்கும் பக்கபலமாக இருக்காது என பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்தார்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் நட்பு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து விதித்து வருகின்ற நிலையில் தாம் ரஷ்யா- உக்ரைன் நாடுகளின் மோதலுக்கு நடுநிலை வகிக்க உள்ளதாக பிரேசில் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் உட்பட உக்ரைனுடனான ரஷ்யாவின் மோதலில் இதுவரை நடுநிலை வகிக்கும் பல நாடுகளுடன் பிரேசில் இணைந்துக்கொள்வதாகவும் பிரேசில் ஜனாதிபதி தெரிவித்தார்.