PTA க்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை’ பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போதுள்ள சட்டத்தின் குறைபாடுகளை நீக்குவதற்காக ஆரம்ப வரைவொன்றைத் தயாரிப்பதற்குத் தொழில்நுட்ப நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

அந்த ஆரம்ப வரைவின் அடிப்படையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு 2026 ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

சட்ட வரைஞரினால் தயாரிக்கப்பட்ட குறித்த சட்டமூலத்திற்கு தற்போது சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.

இச்சட்டமூலம் விரைவில் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதுடன், அதன்பின்னர் ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில்!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது உள்ளடங்கலாக அரசியலமைப்பிற்கான 22 வது திருத்தம் மற்றும் நீதித்துறைச் சட்டத்திற்கான திருத்தம் என்பன நீதி அமைச்சர் ஹர்ஷன...

முன்னாள் அமைச்சர் ராஜிதவின் சகோதரர் மஹீல் சேனாரத்ன கைது

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான மஹீல் சேனாரத்ன, இலஞ்ச ஊழில் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.   நாடு பூராகவும் உள்ள மீன்...