ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் 434 வீதி விபத்துக்களினால் 457 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதில் 177 மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரத்தில் இடம்பெற்ற 43 வீதி விபத்துக்களில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.