கடந்த 21ம் திகதி மாலை நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை லோகி தோட்ட வழிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள பழமை வாய்ந்த ஆல மரமொன்றின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது அதன் கிளையொன்று உடைந்து பிரதான வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில், மோட்டாா் சைக்கிளின் சாரதி உயிரிழந்திருந்தாா்.
தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்தவரும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலையின் கணித பாட ஆசிரியருமான வேலுசாமி மகேஸ்வரன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்த ஆசிரியருக்கு நீதி வேண்டியும் 200 வருடங்கள் பழைமையான ஆலமரத்தின் கிளைகளை வெட்டுவதற்கு அனுமதி வழங்கியது யார்? குறித்த ஆலமரத்தை பாதுகாப்பற்ற முறையில் வெட்டியதன் காரணமாகவே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது என்ற தெரிவித்துமே அந்த பிரதேச மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.