Date:

மேற்கத்திய நாடுகள் நம்மை விரோதிகளாகக் கருதுகின்றன-ரஷ்ய ஜனாதிபதி

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரை தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் உத்தரவு மேலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.

நேற்று மாலை தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய அவர், “மேற்கத்திய நாடுகள் நம்மை விரோதிகளாகக் கருதுகின்றன.

பொருளாதார ரீதியாக நிறைய தடைகள் நம் மீது விதிக்கப்பட்டுள்ளன. இவை சட்டவிரோதமானவை.

நேட்டோ நாடுகளும் நம் நாட்டுக்கு எதிராக அவதூறான கருத்துகளைப் பரப்பி வருகின்றன.

அதனால், பாதுகாப்பு அமைச்சர் அணு ஆயுத தடுப்புப் படைகளை தயார் நிலையில் வைக்குமாறு நான் உத்தரவிடுகிறேன்” எனக் கூறினார்.

இதற்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் இணக்கம் தெரிவித்தார்.

இந்த உத்தரவும், இசைவும் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளைக் ஏற்படுத்தியுள்ளன.

உலகிலேயே ரஷ்யாவிடம் இரண்டாவது பெரிய அணு ஆயுத பலம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தென்னகோன் பிணையில் விடுதலை

மே 9, 2022 அன்று காலி முகத்திடலில் அமைதிப் போராட்டக்காரர்கள் மீது...

கிழங்கு , வெங்காய வரி உயர்வு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பண்ட வரி செவ்வாய்க்கிழமை (26)...

கஹவத்தை கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

கஹவத்தை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பிரிவு...

இந்தியப் பொருட்களுக்கு இன்று முதல் 50% வரி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கான வரிகளை 50% ஆக...