‘கிரிக்கெட் என்பது பலவிதமான பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்படும் ஒரு விளையாட்டு என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயம்சில நேரங்களில் கிராம புறங்களில் கிரிக்கெட் விளையாட்டில் திறமை உள்ளவரகளுக்கு இந்த செலவை தாங்கி கொள்ள முடியாமல் இருக்கலாம். இருப்பினும் வசதிகள் இல்லாத காரணத்தால் சிறுவர்களை் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஒதுக்கி விடக்கூடாது என்பதனை கருத்திற்கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளத இந்த திட்டத்தினூடாக பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பது நோக்கமாகும்.
கிரிக்கெட் விளையாட்டில் திறமையிருந்து அந்த விளையாட்டில் பங்கு கொள்வதற்கு வளப்பற்றகுறை காரணமாக விலகி செல்லும் விளையாட்டு வீரர்களை உள்ளீர்ப்பதற்கான ஒரு சிறந்த முயற்சியாகும்.
இது மிகவும் நல்லதொரு நடவடிக்கையாகும், ஏனெனில் வீரர்கள் அந்தந்த பகுதிகளில் சிறந்து விளங்கவும், கிரிக்கெட் விளையாடவும் வழிவகுக்கும், ‘என்று இலங்கை பாடசாலை கிரிக்கெட் வர்ணனை மற்றும் கிரிக்கெட் ஆய்வாளர் சமீர் யூனுஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் தான் பிற்காலத்தில் தேசிய கிரிக்கெட் வீரர்களாக மாறுகின்றனர் இலங்கை கிரிக்கெட்டின் இந்த முன்முயற்சியைப் பாராட்டுவதுடன் பாடசாலை கிரிகெட் அமைப்பு குறித்து நாம் அக்கறையுடன் இருக்க வேண்டும்.
இந்த முன்முயற்சியானது கிரிக்கெட் உபகரணங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் கழகங்கள் மட்டத்திலும் இவ்வாறான செயற்த்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் இந்த வேலைத்திட்டம் சில மாவட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்படாமல் முழு நாட்டிற்கும் பயன்கிடைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே இது ஒரு நல்ல முயற்சி. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் பல்வேறு திறமையான வீரர்கள் வௌிவருவார்கள் என நம்புகின்றேன். எனவே இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஒரு நல்ல வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக நான் கருதுகின்றேன்’ என சமீர் யூனுஸ் மேலும் தெரிவித்தார்.