Date:

600 ஆடம்பர பொருட்களுக்கான வரியை அதிகரிக்குமாறு கோரிக்கை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியமற்ற 600 ஆடம்பர பொருட்களுக்கான வரியை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கியின் ஆளுநரினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த ஆடம்பரப் பொருட்களின் முழுமையான பட்டியலை முன்வைத்து அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பொருட்களின் இறக்குமதியை ஊக்கப்படுத்தாமல் இருப்பதற்காக அரசாங்கம் இந்த பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை ஓரளவிற்கு அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது.

மத்திய வங்கி ஆளுநரின் பட்டியலில் உள்ளடங்காத அத்தியாவசியமற்ற வேறு ஏதேனும் ஆடம்பர பொருட்கள் உள்ளதா என இலங்கை மத்திய வங்கி தற்போது ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...