Date:

153 தாதியர்கள் நைட்டிங்கேல் உறுதிமொழியுடன் சேவையில் இணைப்பு

கொழும்பு தாதியர் கல்லூரியின் 153 தாதியர்கள் நைட்டிங்கேல் உறுதிமொழி வழங்கி சேவையில் இணையும் நிகழ்வு இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கான நினைவேந்தலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், 2018ஆம் ஆண்டுக்கான தாதியர் குழுவின் முதலாம் ஆண்டு பரீட்சையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற எஸ்.ஏ.டி.எம்.சுபசிங்க, ஏ.எஸ்.வீரசிங்க, கே.டி.சி.பியூமிகா ஆகிய மூன்று மாணவிகளும் பிரதமரிடம் இருந்து சிறப்புப் பரிசுகளைப் பெற்றுக் கொண்டனர்.

இதன்போது சிறந்த திறமையை வெளிப்படுத்திய தாதியர் மாணவிகளுக்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பரிசில்களை வழங்கி வைத்தார்.

அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர், நாரஹேன்பிட்டி அபயராமதிபதி வண.முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் ஆகியோரும் பங்கு கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் 748 பேர் கைது! 26000 பேரிடம் சோதனை

நாடளாவிய ரீதியில் நேற்று (18) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையில் குற்றச்...

6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களின் விசாக்கள் ரத்து – அமெரிக்கா அதிரடி!

அமெரிக்க சட்டத்தை மீறியதாலும், அதிக காலம் நாட்டில் தங்கியிருப்பதாலும் 6,000க்கும் மேற்பட்ட...

மீன் வியாபாரியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு – பேலியகொடையில் இன்று பதற்றம்

பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை துப்பாக்கிச் சூட்டுச்...

தபால் வேலைநிறுத்தம் இன்றும்

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த நாடளாவிய வேலைநிறுத்தம் இன்றும் (19) தொடரும் என்று...