எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் மின்சார துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இன்றும், நாளையும் இரவு வேளைகளில் மின்சார துண்டிப்பு அமுலாக்கப்படமாட்டாது என அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பகல்வேளையில் A,B மற்றும் C வலயங்களில் 3 மணித்தியாலயங்களும், ஏனைய வலயங்களில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.