Date:

நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு-நீர் விநியோகத்திற்கு பாதிப்பு

நாடளாவிய ரீதியில் தற்போது இடம்பெறும் மின் துண்டிப்பு காரணமாக நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதென தேசிய நீர் வழங்கல் சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய மின் தடை காரணமாக பிரதேச நீர் விநியோகத்தில் குறைந்த அழுத்த நிலைமை ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் இணைச் செயலாளர் உபாலி ரத்நாயக்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கு நீர் விநியோகிக்கும் அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்சார துண்டிப்பு காரணமாக இதுவரை பாதிப்பு ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கருத்து தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மேலதிக முறைமையில் மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

அதேநேரம், தேசிய மின் கட்டமைப்பு மூலமாக நேரடியாக மின் விநியோகத்தை பெரும் ஏனைய பகுதிகளில் உள்ள பிரதேச நீர் விநியோக மத்திய நிலையங்களில் போதுமான அளவு மின்பிறப்பாக்கி இல்லாமை காரணமாக சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இடம்பெறும் மின் துண்டிப்பு காரணமாக நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதென தேசிய நீர் வழங்கல் சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய மின் தடை காரணமாக பிரதேச நீர் விநியோகத்தில் குறைந்த அழுத்த நிலைமை ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் இணைச் செயலாளர் உபாலி ரத்நாயக்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கு நீர் விநியோகிக்கும் அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்சார துண்டிப்பு காரணமாக இதுவரை பாதிப்பு ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கருத்து தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மேலதிக முறைமையில் மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

அதேநேரம், தேசிய மின் கட்டமைப்பு மூலமாக நேரடியாக மின் விநியோகத்தை பெரும் ஏனைய பகுதிகளில் உள்ள பிரதேச நீர் விநியோக மத்திய நிலையங்களில் போதுமான அளவு மின்பிறப்பாக்கி இல்லாமை காரணமாக சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானின் 79வது சுதந்திர தினம்

ஏ.எஸ்.எம்.ஜாவித் . 2025.08.14 பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 79வது ஆண்டு விழா இன்று இலங்கையில்...

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்

கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன...

BOC, ITN உட்பட பல அரச நிறுவனங்களுக்கு புதிய தவிசாளர்கள் நியமனம்

முக்கிய அரச நிறுவனங்களுக்கு நான்கு புதிய தலைவர்களை நியமிப்பது உட்பட பல...