Date:

50,000 மில்லிகிராம் போதைப்பொருளுடன் மூவர் கைது

கொழும்பைச்சேர்ந்த 22, 31, 41 வயதுடைய மூவர் வரக்காப்பொலயிலிருந்து கல்குடாவிற்கு கொண்டு வரப்பட்ட 50,000 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பட்டா ரக சிறிய லொறியுடன் நாவலடியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப்புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மட்டக்களப்பு மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இம்மூவரும் கைது செய்யப்பட்டதுடன், போதைப்பொருளைக் கடத்தி வரப்பயன்படுத்தப்பட்ட பட்டா வாகனமும் கைப்பற்றப்பட்டது.

கல்குடாப் பிரதேசத்தை இலக்கு வைத்து வெளிப்பிரதேசத்திலிருந்து பெருந்தொகையான போதைப்பொருள் தொடர்ந்தேர்ச்சியாக கடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்களையும் போதைப்பொருள் மற்றும் வாகனத்தையும் வாழைச்சேனைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை...