பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா வேதன உயர்வு தொடர்பான வழக்கு, எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.