இன்று பகல் 11 மணியளவில் மட்டக்களப்பு கல்முனையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியும் ஆரையம்பதியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்த மோட்டார் சைக்கிளும் ஆரையம்பதி மக்கள் வங்கிக்கு அருகாமையில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் உயிரிழந்துள்ளார்.
கொக்கட்டிச்சோலை கச்சக்கொடி சுவாமிமலை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய முத்துபண்டா யோகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து பஸ் வண்டி சாரதியை பொலிசார் கைது செய்ததுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.