நுவரெலியா பிரதான வீதியின் லோகி தோட்ட பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த ஆல மரத்தின் கிளைகளை வெட்டும் போது அதன் கிளையொன்று முறிந்து விழுந்தமையால் உயிரிழந்த ஆசிரியர் வேலுசாமி மகேஸ்வரனின் பூதவுடல் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் லோகி தோட்ட பொது மயானத்தில் இன்று பிற்பகல் 4 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இறுதி ஊர்வலத்தில் 100 ற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.