கால்பந்தில் இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கும்

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன் திருமணம் முடிந்த கையோடு, அளித்த பேட்டியில் 2026-27 கால்பந்து சீசன் தனது தொழில்முறை வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கக்கூடும் என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

விளையாட்டை விட்டு விலகுவதற்கு முன்பு மகத்தான மரபினை விட்டுச்செல்ல விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகள் இணைந்து நடத்திய 2026 ஃபிஃபா உலகக்கிண்ணத்தில் தனது 6வது உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் பங்கேற்ற பிறகு இந்த முக்கிய முடிவை நோக்கி நகர்ந்துள்ளார்.

தற்போது சவூதி அரேபியாவின் அல் நாசர் கிளப் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, கால்பந்திலிருந்து ஓய்வு பெற்ற அதிக நேரத்தை தன் குடும்பத்தினருடன் செலவிடவும், உலகம் முழுவதும் பயணம் செய்வதுடன் தனக்கு மிகவும் பிடித்தமான ‘பேடல்’ விளையாட்டை விளையாடவும் விரும்புவதாகக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இந்திய அணிக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு

சுற்றுலா இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டிக்காகத் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை குழாம் இன்று...

ஐ.சி.சி. ஜூலை மாத சிறந்த வீராங்கனை விருதுக்கு ஹர்ஷிதா சமரவிக்கிரம

ஜூலை மாதத்துக்கான ஐ.சி.சியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்கள் பட்டியலில் இலங்கை அணியின் ஹர்ஷிதா சமரவிக்கிரம இடம்பெற்றுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறப்பாகச் செயல்படும் வீரர்,...