கொழும்பில் நாளை முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதி குறித்த திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்குள் அடங்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந் நிலையில் பல பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் நான்கரை மணி நேர மின்வெட்டை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் அனுமதித்துள்ளது.
அதற்கமைய, சில வலயங்களில் 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களும் ஏனைய வலயங்களில் 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணையத்தின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.