யுகதனவி உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனைகளை உயர்நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.
அதற்கமைய, இந்த வழக்கை தொடர்ந்தும் விசாரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுகதனவி உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமை மனுக்களும், சட்ட அடிப்படையற்றவை என்பதால், அவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் நேற்று உயர்நீதிமன்றை கோரியிருந்தார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அளுவிஹாரே, ப்ரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி. தெஹிதெனிய ஆகியோரடங்கிய ஐவர் கொண்ட ஆயம் முன்னிலையில் நேற்று குறித்த மனுக்கள் பரிசீலனைக்கு அழைக்கப்பட்டன.
இதன்போது தமது சமர்ப்பணத்தை முன்வைத்த சட்டமா அதிபர் குறித்த மனுக்கள் அடிப்படையற்றவை என தெரிவித்தார்.