Date:

சட்ட விரோதமான முறையில் இலங்கைக்குள் குவியும் டொலர்கள்!

உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் நாள் தோறும் சட்டவிரோதமாக பத்து மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இத்தாலி, டுபாய், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்டனவற்றிலிருந்து இவ்வாறு பணம் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உண்டியல் மற்றும் ஹவாலா முறைமைகள் சட்டவிரோதமானவை என்ற காரணத்தினால் இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த சட்டவிரோத கொடுக்கல் வாங்கல் முறைமை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்ற போதிலும் இந்த உண்டியல் மற்றும் ஹாவாலா முறைமையுடன் அரசியல்வாதிகள், வங்கி அதிகாரிகள், வர்த்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்புபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதன் காரணமாகவே உண்டியல் மற்றும் ஹாவலா குறித்து கிரமமான விசாரணை நடத்தப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வெகுவாக அதிகரித்துள்ள போதிலும் அது இற்றைப்படுத்தப்படாது 203 ரூபா என்ற தொகையில் தொடர்ந்தும் மத்திய வங்கி பேணி வருகின்றது.

எனினும் சந்தையில் டொலர் ஒன்று 243 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. உண்டியில் முறையில் இந்த கூடுதல் தொகை கிடைக்கப் பெறுவதாகத் குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச...