தயான் லங்கா நிறுவனத்தின் பிரதான அனுசரணையில் பஸ்லி ருமி சென்றர் ஆதரவில் கவிக்கமல் பாசில் ரஜனி இணைந்து வழங்கிய “வீனஸ்’ “அக்ஷரா” இசைக்குழுவினர்களின் இனிய இசையில் “தேனும் பாலும் கலந்த வசந்த கானங்கள்” இசைநிகழ்ச்சி மிக பிரமாண்டமாக புதிய நகரமண்டபத்தில் நடைபெற்றது.
இடைக்கால பாடலகளின் அருமையான தெரிவுகளில் களைகட்டிய இந்நிகழ்ச்சி கேட்பவர்கள் செவிகளுக்கு விருந்து படைத்தது. பிரதம புரவலர் ஹாசிம் உமர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் முன்னிலை அதிதியாக வணக்கத்துக்குறிய பிதா அருட்தந்தை சந்ரு பெர்ண்னான்டோ மற்றும் சிறப்பதிதிகளாக தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே செந்தில்வேலவர், பஸ்லி ரூமி சென்றர் உரிமையாளர் பஸ்லி ருமி கலந்து சிறப்பித்தனர்
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக சமூக சேவகி கௌசல்யாதேவி கோவிந்தபிள்ளை மாநகரசபை உறுப்பினர் ஷரினா, தயான் லங்கா முகாமையாளர் ரவி, ஷுசைன் போல்ட்,கலைஞர் ரவீர்திரன், மொஹமட் ஹமீட் ,பிச்சைக்கிருஷ்னா, இம்ரான் நெய்னார், ஜேக்கப், ஆனந்தகுமார், நிஜாம், இரா சமன்குமார்,கெபிட்டல் fm சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ எல் ஜபீர், என்று பலரும் கலந்து கொண்டனர்.
கானத்தின் ஓசையோடு கரவொலி நேசமும் கலந்து கொண்டதுடன் கவிஞர் பிரேம்ராஜ் வழங்கிய நகைச்சுவை மற்றும் நடனவிருந்தும் அனைவரது மனங்களையும் தொட்டுச்சென்றது.
படங்கள் எம். நசார்