Date:

லொறி ஓன்று மதிலில் மோதி விபத்து

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் சிலாபம் 64ம் கட்டைப் பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குமாரகட்டுவ, மிகல்லவட்டவன பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபத்திலிருந்து கொழும்பு பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய ரக லொறியொன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் உள்ள மதில் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது, படுகாயமடைந்த நிலையில் இருந்த குறித்த லொறியின் சாரதியையும், உதவியாளரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த பின்னர், லொறியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், குறித்த லொறியில் பயணித்த உதவியாளர் சிலாபம் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மாதம்பை பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்..!

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...