அரச நிறுவனங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்று நிருபம் இன்று வெளியிடப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகன பாவனை தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.