Date:

கொரோனா வாட்டுக்குள் புகுந்து பைத்தியம் பிடித்த நாய் அட்டகாசம்

பைத்தியம் பிடித்த நாயொன்று, கொரோனா தொற்றாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும், வைத்தியசாலையின் வாட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்த தொற்றாளர்களை கடித்து குதறியுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த வைத்தியசாலையே அல்லோலக்கல்லோலப்பட்டது.

மொரவக கொஸ்நில்கொட அரச வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்துக்குள்ளே புகுந்த, பைத்தியம் பிடித்த நாய், மூன்று பெண்களே கடித்துள்ளது.

நாய், வாட்டுக்குள் புகுந்ததையடுத்து, சில தொற்றாளர்கள் கட்டில்களுக்கு மேலே ஏறி, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தமிட்டுள்ளனர்.

அந்த சிகிச்சை நிலையத்தில், வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிப்பெண்கள் 18 பேர் உட்பட, 38 பேர் சிகிச்சைப்பெற்று வந்துள்ளனர்.

அதில் சிலர், தங்கியிருந்து சிகிச்சைகளை முடிந்துகொண்டு, வீடுகளுக்குச் செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்துள்ளனர்.

எனினும், அங்கு கடமை​யிலிருந்த  வைத்தியசாலை பணியாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில், அந்நாயை, வாட்டுக்குள்ளிருந்து விரட்டியடித்துள்ளனர்.

அங்கிருந்து வீதிக்கு நாய் ஓடியதை அடுத்து, அங்கிருந்த சிலர் நாயை அடித்தே கொன்றுள்ளனர்.

பைத்தியம் பிடித்த அந்த நாள், வைத்தியசாலையின் வாட்டுக்குள் எவ்வாறு நுழைந்தது என்பது தொடர்பில் யாருக்கும் தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுரேஷ் சலேவின் கைது தொடர்பில் அலி சப்ரி!

இன்று இலங்கை இராணுவத்திற்கும் அதன் புலனாய்வுப் பிரிவிற்கும் ஒரு கவலைக்குரிய நாளாகும்...

டெய்சி ஆச்சி வழக்கில் இருந்து விடுதலை

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

Breaking கைதான சுரேஷ் சலே தடுத்து வைத்து விசாரிக்கப்படுகிறார்

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அக்குரேகொட படுகொலை ; இரண்டாவது துப்பாக்கிதாரி கைது

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சியையும் அவரது மனைவியையும் சுட்டுக்...