அகில இலங்கை தாதியர் சங்கத்தினரால் இன்று (21) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணி கைவிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளருடன் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள கலந்துரையாடலை தொடர்ந்து பேரணியை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் எஸ்.பி மெதிவத்த தெரிவித்தார்.
தாதியர் கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தாதியர்களுக்கான பட்டம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.