சகல தேர்தல்களையும் பிற்போடாது விரைவில் நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கூட்டணி இன்றி எந்த கட்சியினாலும் ஆட்சியமைக்க முடியாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற அடிப்படையில் எந்தவொரு தேர்தலுக்கும் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.