ஒக்சிஜன் வழங்கப்படும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்தது.
அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள 77 கட்டில்களில் 66 கட்டில்களிலும் கோவிட் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டார்.
5700 கோவிட் நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், 2650 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி கூறினார்.