Date:

சிவகரனிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை

நேற்று வெள்ளிக்கிழமை சுமார் 5 மணி நேரம் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் கொழும்பில் உள்ள கிருலப்பனை அலுவலகத்தில் வைத்து விசாரணைகளினை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைகளின் போது தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கடந்த 10 ஆண்டுகளில் நடத்திய போராட்டங்கள், கூட்டங்கள் தொடர்பான பல்வேறு விதமான கேள்விகளை முன்வைத்ததாக வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

அதில் பல கேள்விகள் வெறும் கற்பனைக் கதையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இவ்விதமாக மூன்று மாதத்திற்கு ஒரு தடவை விசாரணையை எதிர்கொள்வதாகவும் எமது ஜனநாயக ரீதியான செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த முனைவது நீதியான ஜனநாயக சட்ட ஆட்சிக்கு உகந்தவையாக தெரியவில்லை என உணர்கிறோம், கவலை அடைகிறோம்.

இவ்விதமாக பல சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்துவது என்பது சமூகத்தின் அடிப்படை நீதி பூர்வமான கருத்துரிமையும் செயல்பாட்டையும் கேள்விக்குட்படுத்தி அடிப்படை வாழ்வுரிமையை வலிந்து நசுக்குவதாகவே எமக்கு புலப்படுகிறது.

அரசு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அடக்கு முறைச்செயற்பாட்டை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் எனவும் இதன்போது வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அடுத்த ஐஜிபி வீரசூரிய

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த...

சிறுமியின் உயிரைப் பறித்த வாகன விபத்து

சிகிரியா, திகம்பதஹ வீதியில், பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காரொன்றின்...

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக...

கொழும்பு – பதுளை இடையே புதிய ரயில் சேவை

வார இறுதி நாட்களில் நுவரெலியா மற்றும் எல்ல பகுதிகளுக்கு வருகை தரும்...