காலி – பத்தேகம பகுதியில் உள்ள கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் விழுந்துள்ளார்.
45 அடி கொண்ட, பென்சில் செய்ய பயன்படுத்தப்படும் கனிய கரி எடுக்கும் சுரங்கம் ஒன்றிலேயே குறித்த பெண் விழுந்துள்ளார்.
50 வயதான பெண் ஒருவர் இவ்வாறு விழுந்துள்ளதாகவும், தற்போது அவர் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுப் பகுதியில் பெண்ணொருவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.