நானுஒயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஒயா குறுக்கு பாதையில் லொறியொன்று விபத்துக்குள்ளான சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மகியங்கனை பகுதியில் இருந்து அட்டன் பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்று இருக்கலாம் என்று நானுஒயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்
லொறியினை செலுத்திச் சென்ற சாரதி எவ்வித பாதிப்புமின்றி உயிர்தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது
நானுஒயா குறுக்கு பாதையில் மணல் லொரி போன்ற அதிக பாரம் சுமந்து வரும் வாகனங்களை இப்பாதையில் பயணிக்க தடைவிதிக்கப்பட்டு அறிவித்தல் காட்சிப்படுத்தப்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.