Date:

இந்தியத் தூதுவருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

நேற்று பிற்பகல் இந்திய இல்லத்தில், இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, துணைத் தூதுவர் வினோத் ஜேக்கப், அரசியல்துறை முதன்மை செயலாளர் பானுபிரகாஷ் ஆகியோரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் எம்.எ.சுமந்திரனும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், அடுத்தமாதம் இலங்கைக்கு வருவதற்கான சாத்தியகூறுகள் பற்றி பேசப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வடகிழக்கின் பொருளாதார அபிவிருத்தியில் இந்தியாவின் பங்களிப்பு பற்றி விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்போதும் அதற்கு பின்னரும் இலங்கையின் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக, தொடர்ந்துவந்த இலங்கை அரசாங்கங்கள் இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளில், 13 ஆம் திருத்தத்திற்கு அப்பால்சென்று அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு முறையை உருவாக்குவதாக இருந்தது.

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்பண்ணுவதில் இந்தியா தொடர்ச்சியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கின்ற அதேவேளையிலே, தொடர்ந்தும் இந்தியா அந்த பங்களிப்பை செய்து இலங்கையில், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்தார்.

சுமார் ஒன்றரை மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்பில் வேறு பலவிடயங்களும் தீர்க்கமாக ஆராயப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைவோம்- ஜனாதிபதி

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய...

முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீளக் குடியமர்த்த திட்டம்

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2...

அனர்த்தங்களால் 6000 வீடுகளுக்கு முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...