தற்போது வனஜீவராசிகள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவுக்கும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவுக்கும் இடையிலான முரண்பாடும் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவின் பதவி விலகல் வரை சென்றுள்ள நிலையில் ஜனாதிபதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமைச்சரவையின் பொறுப்பு அரசியலமைப்பு ரீதியாக அமைச்சரவை அமைச்சர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக மேலும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
அமைச்சுக்களின் செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சர்களின் பொறுப்புக்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அமைச்சர்களே அவற்றிற்கு பொறுப்பு கூற வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்களை அழைத்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.