Date:

நுகர்வுக்குப் பொருத்தமற்ற நெல் கொள்வனவு; களஞ்சியங்கள் முத்திரையிடப்பட்டுள்ளது.

இரண்டு களஞ்சியங்களுக்காக, நுகர்வுக்குப் பொருத்தமற்ற நெல்லைக் கொள்வனவு செய்தமை தொடர்பில்,நிக்கவரெட்டிய பகுதியில், இரண்டு அதிகாரிகள், பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்னர்.

வடமேல் கமநல சேவை அமைப்பின் பிரதிநிதிகள், இது குறித்து விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு அறியப்படுத்தியதை அடுத்து, உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைய, கணக்காய்வு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், குறித்த களஞ்சியங்களில் சுமார் 15 இலட்சம் கிலோகிராம் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் 3 இலட்சம் கிலோகிராமுக்கும் அதிகளவான நெல், விலங்கு உணவுக்காக பயன்படுத்துவது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த நெல்லைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்திய வடமேல் பிராந்திய பதில் முகாமையாளரும், அந்தக் களஞ்சியங்களின் உதவிப் பொறுப்பாளரும் இவ்வாறு பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த இரு நெல் களஞ்சியங்ளும், அதிகாரிகளால் முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...

முதலாவது போட்டியில் போராடி வென்ற பாகிஸ்தான்

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது...