கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஆபத்தான ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை பெருமளவு போதைப்பொருட்களுடன பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லியனகேவுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவருடைய வழிகாட்டலில் யாழ். அரியாலை பகுதியில் விசேட சுற்றிவளைப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த பெண்ணிடம் 5 லட்சம் தொடக்கம் 6 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் இருந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.