அவிசாவளை பிரதேசத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரான “மன்ன ரமேஷ்” என்பவரின் உதவியாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 235 கிராம் கேரள கஞ்சா, 50 போதை மாத்திரைகள், ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் வாள்கள் என்பன பொலிஸாரினால் கைபற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் களனி கங்கைக்கு அருகில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கை முன்னெடுப்பதாகவும், சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமையவே இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் மற்றும் பணம் என்பன சந்தேகநபரிடமிருந்ததாகவும், வாள்கள் இரண்டும் அவரின் முச்சக்கரவண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸாா் மேலும் குறிப்பிட்டுள்ளனா். 32 வயதாக இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவிசாவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா்.

                                    




