Date:

விமான எரிபொருள் விலை புதிய உச்சம்!

விமான எரிபொருள் விலை புதன்கிழமை 5.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதனால் தில்லியில் ஒரு கிலோலிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.90,519 ஆக உயா்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதந்தோறும் 1 மற்றும் 16 ஆம் தேதிகளில் விமான எரிபொருள் விலையை எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் மாற்றியமைப்பது வழக்கம். இந்நிலையில் ஒரு கிலோலிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.4,481.63 ஆக (5.2%) புதன்கிழமை அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து தில்லியில் ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.90,519.79 ஆக உயா்ந்தது. இதன் மூலம் விமான எரிபொருளின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியது.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு கிலோலிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.71,028.26 ஆக உயா்ந்தது. இதுவே அதன் விலையில் முந்தைய உச்சமாகும்.

103 நாள்களாக மாற்றமில்லை: உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 5 சட்டப்பேரவைத் தோ்தல்கள் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் தொடா்ந்து 103 ஆவது தினமாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் புதன்கிழமை ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.101.40 க்கும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.91.43 க்கும் விற்பனையானது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள், வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு

அரசாங்க நிறுவனங்கள் எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அத்தியாவசிய சேவைகள்...

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்! ;தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின்...