நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சிகளால் தயாரிக்கப்பட்டுள்ள யோசனை திட்டம் எதிர்வரும் 2ம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான விசேட சந்திப்பொன்று நாளைய தினம் கொழும்பில் இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அமைச்சர்களான விமல் வீரவங்ச அல்லது உதய கம்மன்பில ஆகியோரது வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
டொலர் தட்டுப்பாடு, மின்சாரம், எரிபொருள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினம் ஆகியனவற்றிற்கான தீர்வுகள் குறித்த யோசனைத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இந்த யோசனை திட்டம் தொடர்பான சந்திப்பொன்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவங்சவின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது, தற்போதைய பிரச்சினை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.