2009ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கில் யுத்தம் நிறைவடைந்த போதிலும் தமிழ் ஊடகவியலாளர்கள் இன்றும் பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர் என சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷனுக கருணாரத்ன தெரிவித்தார்.
யுத்தம் நிறைவுற்ற பின்னரும், தமிழ் மக்களை நடத்தும் விதத்தில் மாற்றம் ஏற்படும் என தமிழ் சமூகம் எதிர்பார்த்தது.
எவ்வாறாயினும், கருத்துச் சுதந்திரம் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்தும் பதிவாகி வருவதால் அவர்களின் எதிர்ப்பார்ப்பு பொய்யாகி போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜனவரி கொண்டாட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊடகவியலாளர்கள் வலியுறுத்தினார்கள்
அண்மையில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் இலங்கை பாதுகாப்புப் படையினரால் ஊடகவியலாளர் ஒருவர் பின்தொடரப்பட்ட சம்பவம் எமக்கு நினைவிற்கு வருகின்றது.
இவ்விரு சம்பவங்கள் பதிவான சம்பவங்களாக குறிப்பிடமுடியும். 2009ஆம் ஆண்டு வடக்குஇ கிழக்கில் யுத்தம் நிறைவுற்ற போதிலும், அந்தப் பிரதேசங்களில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பின்னால் பின்தொடரும் ச்வங்கள் நிறைவுக்கு வந்ததாக தெரியவில்லை.
இது போன்று இன்னும் பல சம்பவங்கள் வெளிவராமல் கூட இருந்து இருக்கலாம். இவ்வாறான சம்பவங்கள் இன்னும் தொடர்ந்து பதிவாகிய வண்ணம் வருகின்றது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் எம்மை போன்று ஊடக செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்று நினைத்தோம். இருப்பினும் குறித்த சம்பங்களை பார்க்கின்ற போது அவர்கள் இன்னமும் தடைகள் இருப்பதாக நினைக்கின்றோம்.
வடக்கு ஊடகவியலாளர்கள் போன்று தெற்கில் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் இவ்வாறான தடைகளும் சிக்கல் நிலைகளும் காணப்படுகின்றது.
நாங்கள் பொதுவாக பார்க்கின்ற போது இவ்வாறான சம்பவங்களுக்கு இடமளிக்ககூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.