மூன்று மாதங்களுக்கு மின் துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள அதன் தலைவர், ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், மின் துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.