பிராந்திய வலயத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பி வைப்பதில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
PublicFinance.lk என்ற சுயாதீன ஆய்வு இணைய தளத்தின் புள்ளி விபரத் தகவல்களின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2020ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2021ம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட தொகை 22.7 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
எனினும் பங்களாதேஷ், மாலைதீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பணத் தொகை அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.