Date:

உக்ரைனில் உள்ள இலங்கையர்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து அவதானத்துடன்

உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் நிலைமை தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா ஆக்கிரமிப்பினை எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம் என்ற நிலையில், பல நாடுகள் தங்களது பிரஜைகளை உடனடியாக உக்ரேனை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்தநிலையில் உத்தியோகப்பூர்வ தரவுகளுக்கு அமைய 40 இலங்கையர்கள் தற்போது உக்ரைனில் உள்ளனர்.

அவர்களில் 7 பேர் உயர்கல்வி நடவடிக்கைகளுக்காக அங்கு சென்றுள்ளனர.

உக்ரைனில் இலங்கை தூதரகம் இல்லாத போதிலும், அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் துருக்கி – அன்காராவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அவதானம் செலுத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் தகவல்களுக்கு அமைய உக்ரைனில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் உடனடியாக அங்குள்ள இலங்கையர்களை மீள நாட்டுக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியுடன் கைது

மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து T - 56...

இலங்கை மாணவர்களுக்கு சீனாவின் புலமைப்பரிசில்

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காக, 30 இலங்கை...

அனுர- மோடியால் பெரும் பதற்றம்

"அனுர மோடியின் மோசடி ஒப்பந்தங்களை கிழித்தெறியுங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

“வெள்ளைக்கார பெண்களுக்கு பிரேமதாச உள்ளாடை தைக்கிறார்”

ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலை திட்டத்தை முன்னெடுத்த போது, பிரேமதாச...