Date:

வைத்தியராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர் கைது

ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் பிரதேசத்தில் வைத்தியராக தன்னை அடையாளப்படுத்தி இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தலவாக்கலை விசேட அதிரடிப் படையினரால் இன்று பிற்பகல் குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதற்கிடையில் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்துள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 338 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், போதை மாத்திரைகளை வாங்க வந்திருந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் பணி புரிந்தவர் என தெரிவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக திம்புள்ளை பதன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டில் இருந்து 20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20...

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல்...

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...

இணக்கப்பாடின்றி முடிவடைந்த அமைதிப் பேச்சுவார்த்தை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில்...