Date:

கட்டிடக் கட்டமைப்பை நிறைவு செய்து ‘Topping Off’ஐ கொண்டாடும் TRI-ZEN

இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான John Keells Properties (JKP) மற்றுமொரு முக்கிய மைல்கல்லை கடந்து TRI-ZEN ஸ்மார்ட் வீட்டுத் திட்டத்தின் மூன்று கோபுரங்களின் கட்டமைப்பு நிறைவின் சிறப்பம்சமாக ‘Topping Off’ நிகழ்வுடன் கொண்டாடியது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தலைவர் கிரிஷான் பாலேந்திரா மற்றும் John Keells Propertiesன் சிரேஷ்ட நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் இந்த திட்டத்தில் பங்குதாரர்களாக உள்ளதுடன், இந்நிகழ்ச்சியில் Indra Traders மற்றும் அதன் ஒப்பந்த நிறுவனமான China State Construction Engineering Corporation பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த TRI-ZEN ஊக்குவிப்பு முகாமையாளர் லும்பினி பத்திரகே, “தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் TRI-ZENஇன் கட்டுமானத்தை சீரான வேகத்தில் முன்னெடுப்பதில் எங்கள் குழுக்களின் கடின உழைப்பை அங்கீகரிப்பதற்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறோம். இந்த மைல்கல்லின் மூலம், நாங்கள் இப்போது கட்டுமானத்தின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம், மேலும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை 2023க்குள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவோம் என்று நம்புகிறோம்.” என தெரிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள கட்டிட நிர்மாணிப்பாளர்களிடையே ஒரு பாரம்பரியம் என்னவென்றால், topping off நிகழ்வில் இறுதி கட்டிட கட்டமைப்போடு தொடர்புடைய கட்டுமான நிர்மாணிப்பு நிறைவடைந்தமை மற்றும் கட்டமைப்பு கட்டுமானத்தைச் செய்யும் ஊழியர்களின் வெற்றி மற்றும் உள்ளக கட்டுமானத்திற்கு மாறியதற்கான மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கே ஆகும்.

TRI-ZEN ஸ்மார்ட் ஹோம் 52, 54 மற்றும் 52 மாடிகளில் மூன்று கோபுரங்களுடன் கட்டப்படும் மற்றும் கொழும்பில் 891 ஸ்மார்ட் வீடுகளைக் கொண்டிருக்கும். இரண்டு நீச்சல் குளங்கள், இரண்டு சொகுசு உடற்பயிற்சி கூடங்கள், இரண்டு உடற்பயிற்சி கூடங்கள், ஒரு மேல்மாடி பூப்பந்து மைதானம், ஒரு உணவகம் மற்றும் ஒரு மினிமார்ட் உட்பட 35க்கும் மேற்பட்ட வசதிகளுடன், TRI-ZENஆனது குடியிருப்பாளர்களுக்கு நவீன, உலகத் தரம் வாய்ந்த, ஸ்மார்ட் வாழ்க்கை முறையை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

“கடந்த மூன்று ஆண்டுகளில் நமது நாடு எதிர்கொண்ட முன்னோடியில்லாத சவால்கள் இருந்தபோதிலும், இந்த மைல்கல்லை சரியான நேரத்தில் எட்டியது குறிப்பிடத்தக்க சாதனையாகும். இது எங்கள் தனித்துவமான குழுவின் தைரியம், உறுதிப்பாடு மற்றும் நிபுணத்துவம் மற்றும் John Keells Propertiesஇன் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஒரு சான்றாகும்.” என காணிக் கட்டட விற்பனை குழுமத்தின் தலைவர் நயனா மாவில்மடா தெரிவித்தார்.

இலங்கையின் நகர்ப்புற வாழ்க்கை முறையை மறுவரையறை செய்யும் நோக்கில் இந்த திட்டத்தை நாங்கள் ஆரம்பித்தோம். TRI-ZENஇல் நாம் அவதானித்த விடயம் தான் விற்பனை சாதனை, இந்த உட்பார்வையானது முதலீட்டாளர்கள் மற்றும் வீடு வாங்குபவர்கள் இருவராலும் சமமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் காட்டுகிறது. நிலையற்ற பொருளாதாரம் நிலவிய காலங்களில், ரியல் எஸ்டேட் சில நேரங்களில் முதலீடு செய்ய மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் நிலையான சொத்து ஆகும். TRI-ZENஇன் தனித்துவமான கருத்தாக்கம், கொழும்பில் அதன் மைய இடம் மற்றும் John Keells Propertiesன் இணையற்ற நம்பகத்தன்மை ஆகியவை இத்திட்டத்தை மற்ற திட்டங்களில் இருந்து உண்மையிலேயே வேறுபடுத்தியுள்ளன.” அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பின் யூனியன் பிளேஸின் மையப்பகுதியில் அமைந்துள்ள TRI-ZENஇல் அமைந்துள்ள ஒவ்வொரு வீடும் ஒரு ஏக்கருக்கும் அதிகமான இடத்துக்கு மேலதிகமாக ஆடம்பரத்தையும் வசதியையும் வழங்கும் வகையில் அதிநவீன வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

இந்தக் கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று படுக்கையறைகளைக் கொண்டவை, மேலும் இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடானது 37 மில்லியன் ரூபாவில் இருந்து தொடங்குகிறது. இந்த வீடுகள் ஒவ்வொன்றும் அதிநவீன ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்பங்கள் மற்றும் வடிவமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளன, இது குடியிருப்பாளர்கள் ஆடம்பரமான மற்றும் நவீன சூழலில் வாழ அனுமதிக்கிறது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்காக TRI-ZEN இணையத்தளத்திற்கு பிரவேசிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373