Date:

மிச்சல் பெச்சலட்டின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக பதிலளிக்க வேண்டும்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்சலட்டால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையின் பிரதி இன்று இலங்கை அரசாங்கத்துக்குக் கிடைக்கப்பெறவுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவை மேற்கோள்காட்டி ஆங்கில பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாத இறுதியிலும் மார்ச் மாதத்திலும் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு நடைபெறவுள்ளது.

இதில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையின் அடிப்படையிலான முன்னேற்றங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கம் வழங்கும் பதிலும், தமது அறிக்கை வாசிப்பின் போது ஆணையாளர் உள்ளடக்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு

டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு...

எரிபொருள், வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு

அரசாங்க நிறுவனங்கள் எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அத்தியாவசிய சேவைகள்...

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...