Date:

களனிதிஸ்ஸ மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைந்தது

270 மொகாவொட் மின்சார உற்பத்தி இடம்பெறுகின்ற கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் மேற்கு முனையம் தொழிநுட்ப கோளாறு காரணமாக நேற்றிரவு செயலிழந்துள்ளது.

அதேநேரம், 130 மொகாவொட் மின்சார உற்பத்தி இடம்பெறுகின்ற, களனிதிஸ்ஸ சொஜிஸ்ட் மின்னுற்பத்தி நிலைய மின் பிறப்பாக்கியும் நேற்று செயலிழந்தது.

இதன் காரணமாக, நாட்டின் பல பாகங்களில் குறுகிய கால மின் துண்டிப்பு எதிர்பார்க்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க நேற்றிரவு தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், செயலிழந்திருந்த களனிதிஸ்ஸ சொஜிஸ்ட் மின்னுற்பத்தி நிலைய மின்பிறப்பாக்கி, நேற்றிரவு புனரமைக்கப்பட்டு தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...