Date:

கடன் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ள நாட்டை மீட்டெடுக்க வேண்டும்.

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன்களை மீளச் செலுத்துவதில் உள்ள நெருக்கடிகள் குறித்து ஆராயும் விதமாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற நிதிக்குழுக்கள் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் கொழும்பில் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது, “சர்வதேச கடன் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ள நாம் உடனடியாக சகல நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து கடன் செலுத்துவதில் மீள் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.” என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

‘தற்போதைய நிதி நெருக்கடி நிலைமைகளை நாம் சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.இந்தச் சூழ்நிலையில் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு இருக்காது அடுத்த கட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய தீர்மானங்கள் என்ன என்பதையே ஆராய வேண்டும்.

அதற்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாக நாம் பொது இணக்கப்பாட்டை கண்டுள்ளோம்.நாடாளுமன்ற நிதிக் குழுக்களின் தலைவர்களும் இதே நிலைப்பாட்டை தான் கொண்டுள்ளனர். அரசாங்கத்திற்கும் இதனை அறிவிக்கவுள்ளோம்” எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (17) முதல் அனைத்து...

நாட்டில் இருந்து 20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20...

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல்...

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...