30 ஆண்டு காலமாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட 39 இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பு தரப்பினருக்கு மாத்திரமல்லது எதிர்காலத்தில் ஏனைய துறைகளை சார்ந்த நபர்களுக்கும் இந்த நிலைமையை எதிர்நோக்கும் ஆபத்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே நீதித்துறையுடன் தொடர்புடைய சில நபர்களின் மாணவர்களுக்கு கல்வி வீசா அனுமதிகளை வழங்க பல நாடுகள் மறுத்துள்ளன.
இதனடிப்படையில் அரசாங்கம் இந்த நிலைமை சம்பந்தமாக ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அந்த 39 அதிகாரிகளுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கும் என அவர்கள் எதிர்பார்துள்ளனனர் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.