சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 6வது நாளாக தொடர்கிறது.கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்க தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னப்பிரிய ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இரண்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்துமாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது. மேலும் தடை உத்தரவு குறித்து தங்களுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.