ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், நேற்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், வைத்தியசாலை சேவைகள் மற்றும் மின் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
மின்சாரம் வழங்கல், நோயாளர் பராமரிப்பு, முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்கள் மற்றும் வரவேற்பு, பராமரிப்பு, போஷாக்கு மற்றும் சிகிச்சை தொடர்பான அனைத்து சேவைகள், வேலை அல்லது உழைப்பு ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.