Date:

இ.மி.ச முன்வைத்த கோரிக்கை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

“எதிர்வரும் 3 மாதங்களுக்கு மின்சார துண்டிப்பு அவசியம்” என இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின்சார துண்டிப்புக்கான அனுமதியை வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மின் நுகர்வை குறைக்க வேண்டும். நாளொன்றுக்கு 300 மெகாவோட் மின்சாரத்தைக் குறைக்க முடியுமாயின், இலக்கை நோக்கிப் பயணிக்க முடியும்.

எனவே, மின்சாரத்தை தடையின்றி விநியோகிக்க வேண்டுமாயின், பொதுமக்களும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் இந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...

ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்!

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக்...

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...