இன்று தம்புள்ளை-மாத்தளை பிரதான வீதியில் கப்புவத்த பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் டோசர் இயந்திர விபத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தியபெதும, இஹகுலுவெவ பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 27 வயதுடைய என்.ஜி. லக்ஷ்மன் சஜித் சேனாரத்ன என்பது தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளார்.